சென்னை கொரட்டூர் ஏரிக்கரையில் பனை விதைகளை ஊன்றிய தன்னார்வலர்கள்
சென்னையில் தன்னார்வலர்கள், சூழலியல் ஆர்வலர்கள், காவல்துறையினர் இணைந்து கொரட்டூர் ஏரிக்கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் ஊன்றும் நற்பணியில் ஈடுபட்டனர்.
சென்னைக் குற்றப்பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன், அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ், கொரட்டூர் காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை ஊன்றும் பணியை தொடங்கி வைத்தனர்.
குழலோசை அறக்கட்டளை, கொரட்டூர் அரிமா சங்கம், சூழல் காப்பு இயக்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த ஐம்பதுக்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு ஏரிக்கரையில் பனை விதைகளை ஊன்றினர்.
அப்போது அம்பத்தூர் காவல் துணை ஆணையர் கனகராஜ் பனையின் சிறப்புகள், பனையின் நன்மைகள் குறித்துப் பயனுள்ள தகவல்களை எடுத்துக் கூறினார்.
Comments