திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதற்கு முதலமைச்சருக்கு நன்றி - ஆர்.கே.செல்வமணி

0 1595

திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்த பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, படப்பிடிப்பில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது படப்பிடிப்பில் 75 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை 100 ஆக அதிகரித்தால் தான் அனைத்து படப்பிடிப்புகளும் துவங்கும் என்றும், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், படங்களை வெளியிட ஓ.டி.டி. தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments