நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார்.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 375 ஆசிரியர்களில், சென்னை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.
தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற இருவர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனிடையே, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்துவைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 பாலங்களையும் திறந்துவைத்தார்.
Comments