நடிகை ரியாவிடம், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் 2வது நாளாக விசாரணை

0 1432
நடிகர் சுசாந்த் மரண வழக்கில், அவரது காதலியும் நடிகையுமான ரியாவிடம், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் சுசாந்த் மரண வழக்கில், அவரது காதலியும் நடிகையுமான ரியாவிடம், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று 6 மணி நேரம் ரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, சுசாந்த் போதைப் பொருள் பயன்படுத்தி வந்ததை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள, ரியாவின் சகோதரர் சோவிக், சுசாந்த் இல்லத்தில் மேலாளராக இருந்த சாமுவேல் மிராண்டா, சுசாந்தின் தனிப்பணியாளராக இருந்த திபேஷ் சாவந்த் ஆகியோரை உடன்வைத்து ரியாவிடம் இன்று விசாரணை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப் பொருள் விற்பவர்கள் மூலமாக, சுசாந்துக்கு போதைப்பொருள்களை வாங்கி கைமாற்றியது தொடர்பாக இந்த விசாரணை நடைபெறுகிறது. விசாரணையின் முடிவில் நடிகை ரியா கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments