ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசியை வாங்க இந்தியா ஆர்வம்
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான Sputnik V-ன் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்த முழுமையான விவரங்கள் இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளதாக அதை உருவாக்கிய காமாலெயா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
76 பேரிடம் நடத்தப்பட்ட இந்த தடுப்பூசியின் முதல், இரண்டாம் கட்ட சோதனைகளில் அந்த தடுப்பூசி உறுதியான நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காமாலாயா ஆய்வு நிறுவனம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உரிய அனுமதியை பெற்று இந்தியாவில் 3 ஆம் கட்ட சோதனையை நடத்தலாம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் இந்த தடுப்பூசியை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளன என காமாலயா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments