மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து போராட்டம்
மெக்சிகோவில் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தர வலியுறுத்தியும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடப்பாண்டில் முதல் 7 மாதங்களில் பெண்களுக்கு எதிரான படுகொலைகள் 5 புள்ளி 4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஜூலை மாதத்தில் மட்டும் 74 பெண்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக புகார்கள் பதிவாகி உள்ள நிலையில், போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments