முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்வதாக அறிவிப்பு

0 2567
கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்வதாக கூறியுள்ளார். கண்தானம் செய்ய விரும்புவோருக்கு உதவிடும் இணையதளத்தையும் அவர் துவக்கி வைத்தார்.

கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்வதாக கூறியுள்ளார். கண்தானம் செய்ய விரும்புவோருக்கு உதவிடும்  இணையதளத்தையும் அவர் துவக்கி வைத்தார்.

இறப்புக்குப் பிறகு கண்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும் கண் தானத்தின் மூலம், பார்வையிழந்தவர்கள் புதுவாழ்வு பெறுகிறார்கள். அந்த வகையில் கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், தனது இரு கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கண்தானம் செய்ய விரும்புவோருக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்ட https://www.hmis.tn.gov.in/eye-donor/    இணையதளத்தையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

நாட்டில் சுமார் 68 லட்சம்பேர் கருவிழி பாதிப்பினால் பார்வை இழந்துள்ளனர். தற்போது உள்ள மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக ஒரு நபரிடம் தானமாக பெறப்படும் இரு கண்கள், எளிய கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் இரு நபர்கள் கண்பார்வை பெற்று பயனடைவதுடன், கூடுதலாக கண்களின் பிற பாகங்களும் தேவைக்கேற்ப கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் கண்தானம் செய்ய விரும்புவோர் குறித்த பதிவேட்டினை ஏற்படுத்தும் வகையிலும் https://www.hmis.tn.gov.in/eye-donor/     இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments