இத்தாலியன் கிராண்ட்பிரி கார் பந்தயம் :சாம்பியன் பட்டத்தை வென்றார் பிரான்ஸ் வீரர் பியர் கேஸ்லி

0 1268
இத்தாலியன் கிராண்ட்பிரி கார் பந்தயம் :பிரான்ஸ் வீரர் பியர் கேஸ்லி சாம்பியன் பட்டம்

இத்தாலியன் கிராண்ட்பிரி கார் பந்தயத்தில் பிரான்ஸ் வீரர் பியர் கேஸ்லி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

நடப்பு சீசனில் 17 பந்தயங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், எட்டாவது போட்டி இத்தாலியின் மோன்சா (Monza) நகரில் நேற்று நடைபெற்றது.

விறுவிறுப்பான இந்த பந்தயத்தில், வெட்டல், மெக்னசன் ஆகியோரின் கார்கள் பழுதாக, 23வது சுற்றில் லெக்லர்க்கின் கார் விபத்தில் சிக்கியது.

306 கிலோ மீட்டர் பயண தூரத்தை ஒரு மணி 47 நிமிடம் 6 வினாடிகளில் கடந்து பிரான்ஸ் வீரர் பியர் கேஸ்லி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இரண்டாவது இடத்தை ஸ்பெயின் வீரர் கார்லஸ் செயின்சும், கனடா வீரர் லான்ஸ் ஸ்ட்ரோல் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இப்போட்டியில்தான் ரெட்புல், மெர்சிடஸ், பெராரி அணி வீரர்கள் முதல் மூன்று இடங்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments