மார்ச் 25 முதல் மே 3 வரை முன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகள் திருப்பித் தருவதாக மத்திய அரசு உறுதி

0 1828
மார்ச் 25ம் தேதிக்கு முன்பாக மே 3 வரை முன்பதிவு செய்த விமானப் பயணிகளுக்கு 15 நாட்களுக்குள் முழு கட்டணத்தைத் திருப்பித் தரத் தயார் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மார்ச் 25ம் தேதிக்கு முன்பாக மே 3 வரை முன்பதிவு செய்த விமானப் பயணிகளுக்கு 15 நாட்களுக்குள் முழு கட்டணத்தைத் திருப்பித் தரத் தயார் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில்,கட்டணத்தைத் திருப்பித் தர முடியாத நிலை இருந்தால், அந்த தொகைக்கான கடன் ஈடு பயணிக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பயணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை அந்நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்து அந்த கட்டணத்தைக் கழித்துக் கொள்ளலாம் என்றும், பயணிகள் அதை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், மார்ச் 31க்குப் பிறகு கட்டணத் தொகை வட்டியுடன் திருப்பித் தரப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments