நீரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் மனுக்கள் இன்று தொடங்கி 5 நாட்களுக்கு விசாரணை
வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியா அழைத்து வந்து விசாரிக்கக் கோரிய மனுவின் மீது இன்று முதல் 5 நாட்களுக்கு லண்டன் நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் நீரவ் மோடியை இந்தியா அழைத்துச் சென்று விசாரணை நடத்த அனுமதி கோரி இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இன்று முதல் 11ம் தேதி வரை விசாரணை நடைபெற உள்ளது. 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துள்ள நீரவ் மோடி இந்தியாவில் இருந்து தப்பி லண்டனில் பதுங்கி வாழ்ந்து வந்ததாக இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் தரப்பில் தாக்கல் செய்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments