மனிதர்களைப் போல அமர்ந்து, ஆனந்த குளியல் போட்ட கரடி
உக்ரைனில் சர்க்கஸில் இருந்து மீட்கப்பட்ட கரடி ஒன்று மனிதர்களைப் போல அமர்ந்து சொறிந்தபடியே ஆனந்தமாக குளியல் போட்டது.
சர்க்கஸில் 25 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட தோஷ்கா என்ற கரடி அங்கிருந்து மீட்கப்பட்டு சடானோவ் விலங்கியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கரடி மீது பைப் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.மனிதர்களைப் போல நன்றாக கால்களை நீட்டி அமர்ந்து கொண்ட தோஷ்காவ், அங்கும் இங்குமாக சொறிந்து ஆனந்தக் குளியலை அனுபவித்தது.
Comments