கேரளாவில் கொரோனா சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

0 22989

கேரளாவில் கொரோனா சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாயும், அவரது 19 வயது மகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் அந்த இளம்பெண் அடூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு மருத்துவர்கள் மாற்றினர்.

இதற்காக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். செல்லும் வழியில் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரான நவுபல் என்பவன், அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஓட்டுநர் நவுபல் கைது செய்யப்பட்டான். காயங்குளம் பகுதியை சேர்ந்த நவுபல்மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments