சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம் வெடித்தது போலீசார் மிளகு தோட்டா மூலம் துப்பாக்கிச் சூடு
சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளதால் போலீசார் மிளகு தோட்டா மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கும், சீனா விதித்த புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கும் எதிராக அங்கு போராட்டம் நடந்து வருகிறது.
கவுலூன் தீபகற்பப் பகுதியில் நடந்த போராட்டத்தைக் கலைக்க PINBALL துப்பாக்கிகளில் மிளகுக் குண்டுகளைப் போட்டு போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் வலி மற்றும் எரிச்சல் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர். அவர்களைப் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments