பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் ராஜினாமா செய்யக் கோரி போராட்டம்
ஐரோப்பிய நாடான பெலாரசில் அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் பேரணியாகச் சென்றனர்.
அங்கு கடந்த 26 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் அந்நாட்டு அதிபர், கடந்த மாதம் நடந்த தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்களை தடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பலர் கைது செய்யப்பட்டனர்.
Comments