மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டிற்கு தாவூத் இப்ராகிம் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்

0 1630

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு நேற்றிரவு மர்ம நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. நிழல்உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் பெயரில் பேசிய அந்த நபர், தாக்கரேவின் இல்லத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மும்பை குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்கரேவின் இல்லத்தை சுற்றிப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments