அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதற்கட்ட மாணவர் சேர்க்கை - 60 சதவீத இடங்களே நிரம்பின

0 7713
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதற்கட்ட மாணவர் சேர்க்கை - 60 சதவீத இடங்களே நிரம்பின

அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதற்கட்ட மாணவர் சேர்க்கையில் 60 சதவீத இடங்களே நிரப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக முதல்முறையாக இணையவழி விண்ணப்பப்பதிவு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, இணையவழியில் 3.12 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 2.25 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கல்லூரி அளவிலான தரவரிசை வெளியிடப்பட்டு முதற்கட்ட மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில், தரவரிசையில் முன்னிலையில் இருந்த பல மாணவர்களுக்கும் கல்லூரிகளில் இருந்து அழைப்பு வராததால் பெற்றோர்கள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முதற்கட்ட மாணவர் சேர்க்கையில் மொத்தம் 60 சதவீதமான இடங்களே நிரப்பட்டுள்ளதாகவும், பல கல்லூரிகளில் 40 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments