மனைவியின் நடத்தையில் சந்தேகம் : அரசு பள்ளி ஆசிரியர் அரங்கேற்றிய கொடூரம்

0 9797
மனைவியின் நடத்தையில் சந்தேகம் : அரசு பள்ளி ஆசிரியர் அரங்கேற்றிய கொடூரம்

புதுச்சேரியில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், சந்தேகத்தின் பெயரில் மனைவியை கட்டி வைத்து, கழுத்தறுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

வில்லியனூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் விஜயன் என்பவர், கடந்த சில மாதங்களாக தனது மனைவி சாந்தியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இருவரும் வீட்டில் இருந்த போது, மீண்டும் தகராறு ஏற்பட்டதால், ஆத்திரம் அடைந்த விஜயன், இக்கொடூரத்தை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.

மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி,  முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் விஜயன் சரண் அடைந்தார்.  விஜயனை கொரேனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு  பதிவு செய்து   விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments