2020 ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

0 24171
ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

I.P.L கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அபுதாபியில் 19ஆம் தேதி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களிலும் யாருடன் விளையாடுகிறது. எங்கே விளையாடுகிறது? என்ற முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 2020 - ம் ஆண்டுக்கான I . P. L - 13 - வது சீசன் டி20 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வருகிற 19 ஆம் தேதி, போட்டி துவங்குகிறது. நவம்பர் 3 ஆம் தேதி வரை மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது. எங்கே விளையாடுகிறது? என்ற முழு விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டி துவங்கும் முதல் நாளில், ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொள்கிறது.

22 ஆம் தேதி ஷார்ஜாவில் ராஜஸ்தான் அணியுடன் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 25 ஆம் தேதி துபாயில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதும்.

அக்டோபர் 2 - ல் துபாயில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர் கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 4 ஆம் தேதி துபாயில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும், 7 ஆம் தேதி அபுதாபியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் எதிர் கொள்ளும்,

அக்டோபர் 10 - ல் துபாயில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

அக்டோபர் 13- ல் துபாயில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர் கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 17 ஆம் தேதி ஷார்ஜாவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியையும், 19 - ல் அபுதாபியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் சந்திக்கும்.

அக்டோபர் 23- ல் ஷார்ஜாவில் மும்பை இந்தியன்ஸ், 25- ல் துபாயில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் , 29 - ல் மீண்டும் துபாயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.

நவம்பர் 1 ஆம் தேதி, அபுதாபியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர் கொள்ளும்.

நவம்பர் 3 ஆம் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறும். பிளே ஆப் போட்டிகளுக்கான தேதி, இறுதி போட்டிக்கான தேதி பிறகு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

துபாயில் 24 போட்டிகளும், அபுதாபியில் 20 போட்டிகளும், சார்ஜாவில் 12 போட்டிகளும் நடைபெறும்.

போட்டிகள் அனைத்தும் மதியம் 3.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் துவங்கும்.

ஐ. பி. எல் கிரிக்கெட் திருவிழா , உலகம் முழுவதும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments