இங்கிலாந்து பர்மிங்காம் நகரில் அடுத்தடுத்த நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம் : காரணம் குறித்து விசாரணை
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் அடுத்தடுத்து நடந்த தாக்குதல் சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 7 பேர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உணவகம் ஒன்றின் அருகே நள்ளிரவு ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அடுத்தடுத்து தாக்குதல் புகார்கள் பதிவானதாகவும் சம்பவ இடத்துக்கு சென்ற போது பலர் படுகாயங்களுடன் கிடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கத்தி குத்து சம்பவங்களுக்கான காரணம் தெரியாத நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இது தீவிரவாதத் தாக்குதல் என்பதற்கான எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
Comments