சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் மாற்றிடத்தில் நடத்த ஏற்பாடு
சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் மாற்று இடத்தில் நடைபெறவுள்ளது.
கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பன உள்ளிட்டவற்றை முடிவு செய்யும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், சபாநாயகர் தலைமையில் அவரது அறையிலேயே நடைபெறுவது வழக்கம்.
தற்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வசதியாக, சபாநாயகர் அறைக்கு அருகில் உள்ள குழு கூட்ட அரங்கில் வரும் 8ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments