பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் , வருகைப் பதிவு கட்டாயம் அல்ல என பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு

0 3108
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்றும், ஆன்லைன் வகுப்புகளில் வருகைப் பதிவு எடுக்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்றும், ஆன்லைன் வகுப்புகளில் வருகைப் பதிவு எடுக்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று பரவலாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஆன்லைன் வகுப்புகளுக்கான சில கூடுதல் வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளைக் கண்காணிக்க ஒவ்வொரு பள்ளியும், அலுவலரை நியமிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும், கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் என்பது கட்டாயமில்லை என்றும், குடும்பச் சூழலால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காத மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளில் வருகைப் பதிவு எடுக்கக் கூடாது, மதிப்பெண்கள் கணக்கிடக் கூடாது என்றும், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு முழுமையாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களை மனப் போராட்டத்துக்கு உள்ளாக்கும் எந்த செயலிலும் ஆசிரியர்கள் ஈடுபடக் கூடாது என்றும் கல்வித்துறை ஆணையர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு ஒரே நேரத்தில் இணைய வழி வகுப்புகள் நடந்தால், அவர்களுக்கு சாதனங்கள் பற்றாக்குறை இருப்பின் மூத்த பிள்ளை பயன்படுத்தி கொள்ளலாம், இதன்பொருட்டு குடும்பத்தில் எழும் மனப் போராட்டங்கள் குறையும் எனவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments