புயல் பாதிப்புகளை அதிபர் கிம் நேரில் பார்வையிட்டதாக தகவல்
வட கொரியாவில் புயல் பாதித்த இடங்களை அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஹிம்ஜியோங் மாகாணத்தில் கடற்கரையோரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சேதப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த அதிபர் கிம் ஜாங் உன், உள்ளூர் மாகாணக் கட்சி குழுத் தலைவரை மாற்றி உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தலைநகர் பியோங்யாங்கில் இருந்து கட்சி உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேரை பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Comments