இஸ்ரேல் விமானத்திற்கு வான்பரப்பை பயன்படுத்த சவுதியைத் தொடர்ந்து பஹ்ரைனும் அனுமதி

0 3206

சவுதியை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விமான போக்குவரத்திற்கு தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள பஹ்ரைனும் அனுமதி வழங்கியுள்ளது.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தணிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே கடந்த மாதம் 14 ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றில் முதல் முறையாக விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த விமானம் சவுதி அரேபியாவின் வான்பரப்பு வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், சவுதியை தொடர்ந்து மற்றுமொரு வளைகுடா நாடான பக்ரைனும் இஸ்ரேல்-அமீரக விமான போக்குவரத்திற்கு தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments