"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கொரோனா பரிசோதனை - இனி மருத்துவர் பரிந்துரை தேவையில்லை..!
இனி டாக்டரின் பரிந்துரை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்பவர்கள் டாக்டர்களின் பரிந்துரையின் படி மருத்துவ சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று இருந்த நிலை மாறி, விருப்பம் உள்ளவர்கள் தேவைப்பட்டால் கொரோனா சோதனை செய்து சான்றிதழ் வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அனுப்பிய அறிக்கையில், சில மாநிலங்களில் கொரோனா பரிசோதனை செய்ய கெடுபிடிகள் இருந்ததாகவும் இனி மருத்துவர்கள் சுதந்திரமாக செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments