இந்திய-சீன எல்லை வரை எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாத புதிய சாலையால் பலம் பெறும் எல்லைப் பாதுகாப்பு

0 25660
இந்திய - சீன எல்லையில் புதிய சாலை அமைக்கும் பணியை எல்லை சாலைகள் அமைப்பான BRO கிட்டதட்ட முடித்து விட்டதாக அறிவித்துள்ளது.

இந்திய - சீன எல்லையில் புதிய சாலை அமைக்கும் பணியை எல்லை சாலைகள் அமைப்பான BRO கிட்டதட்ட முடித்து விட்டதாக அறிவித்துள்ளது.

எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாத வகையில் நிம்மு-படம்-தர்ச்சா இணைப்பு சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 கிலோமீட்டர் தூரம் சாலைக்கான பணிகள் மட்டுமே மீதமுள்ளன.

எல்லைவரை படைகளையும் உபகரணங்களையும் கொண்டு செல்ல இந்த சாலையை இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தலாம். மணாலியில் இருந்து லே வரை செல்வதற்கான பயண நேரமும் இதனால் 12 மணி நேரத்தில் இருந்து சுமார் 5 மணி நேரம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் மூன்றாவது சாலை தயார் நிலையில் உள்ளது. மற்ற சாலைகள் பனிக்காலங்களில் மூடப்பட்டிருக்கும். ஆனால் இந்த புதிய சாலையை ஆண்டின் 365 நாட்களிலும் பயன்படுத்தமுடியும் என்று எல்லைகளில் சாலைகளை கட்டமைக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments