ஏழைகள் பூச்சிகளை உண்பதாக வடகொரியாவில் இருந்து தப்பிய பெண் அதிர்ச்சி தகவல்
வடகொரியாவில் கிம் ஜாங் ஆட்சியின் கீழ் அப்பாவி மக்கள் படும் கொடுமைகளை அங்கிருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
வடகொரியாவில் பிறந்த யியோன்மி பார்க் என்பவர், அங்கிருந்து வெளியேறி தற்போது,அமெரிக்காவில் வசித்து வருகிறார். வடகொரியாவில் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் பெருவாரியான மக்கள் சத்தான உணவுக்காக பூச்சிகளையே சாப்பிட்டு வருவதாக கூறும் பார்க், வடகொரியாவில் இருந்து தமது 13-வது வயதில் வெளியேறும் வரை தாமும் பூச்சிகளை சாப்பிட்டதாக கூறுகிறார்.
பொதுவாக சேரிப்பகுதிகள் போன்றே வடகொரிய தெருக்கள் காணப்படுவதாக கூறும் பார்க், தெருக்களில் கேட்பாரற்று சடலங்கள் கிடப்பதையும் தாம் அந்த சிறு வயதில் காண நேர்ந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.மின்சாரம் கூட வடகொரியாவில் பொதுவல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
Comments