சீனாவுக்கும் பைட் டான்ஸூக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் டிக்டாக்
சீன அரசுக்கும் பைட் டான்ஸ் நிறுவனர் ஜிங் யிமிங்கிற்கும் இடையே டிக் டாக் பிரச்சனை விரிசலை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு காரணங்களை காட்டி இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டதையடுத்து சலுகைகள் வழங்குவது குறித்து சீன அரசு பைட் டான்ஸை அணுகியபோது, நடுத்தர அளவிலான ஊழியர்களை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் அனுப்பியது. இது, அரசு உதவியின்றி பைட் டான்ஸ் தனித்து செயல்பட விரும்புவதை குறிப்பதாக தகவல் வெளியாகியது.
மேலும், டிக்டாக் செயலியை தங்கள் நாட்டு நிறுவனத்திடம் விற்காவிடில் தடை செய்யப்படும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வெள்ளை மாளிகையுடனான பேச்சு வார்த்தைக்கு வாஷிங்டனில் உள்ள சீனா தூதர் குய் தியான்காய்யை ஜிங் குழு தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments