சமூகவலைதளங்களில் பள்ளி-கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பு குறித்து தவறான தகவல் பரவுகிறது - அதிகாரிகள் மறுப்பு

0 2966
சமூகவலைதளங்களில் பள்ளி-கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பு குறித்து தவறான தகவல் பரவுகிறது - அதிகாரிகள் மறுப்பு

தமிழகத்தில்  பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்திருப்பதாக சமூகவலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்று அரசு அதிகாரிகள்  மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பள்ளி, கல்லூரிகள் 14ம் தேதி முதலும், திரையரங்குகள் அக்டோபர் 1ம் தேதி முதலும் திறக்கப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது போன்ற அறிக்கை பரவி வருகிறது.

ஆனால் இது உண்மையில்லை என்றும், அது போலியான அறிக்கை என்றும் மறுத்துள்ள அதிகாரிகள், பள்ளி-கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பு குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments