உலகின் வாகன உற்பத்தித் தொழில் மையமாக இந்தியா உருவெடுக்க வாய்ப்பு - பவன் முஞ்சால்

0 2071
உலகின் வாகன உற்பத்தித் தொழில் மையமாக இந்தியா உருவெடுக்க வாய்ப்பு - பவன் முஞ்சால்

உலகின் வாகன உற்பத்தித் தொழில் மையமாக இந்தியா உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும், அந்த வாய்ப்பை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்றும் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் பவன் முஞ்சால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பவன் முஞ்சால் உரையாற்றினார்.

அப்போது உள்நாட்டுத் தொழில்களை வளர்க்கப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், மற்ற தொழில்துறையினருக்கு வாகன உற்பத்தித் துறை முன்னின்று வழிகாட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, பொறியியல், புத்தாக்கம் புனைதல் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டு வாகன உற்பத்தித் துறை வளர்ச்சிப் பொறியாக இருக்கும் எனத் தெரிவித்தார். 

உலகில் அதிக அளவு இளைஞர்களைக் கொண்டிருப்பது இந்தியாவின் மிகப்பெரிய சிறப்பு என்றும் பவன் முஞ்சால் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments