கப்பலில் இருந்து நாட்டின் பாதுகாப்புப் பற்றிய தகவல்கள் அடங்கியப் பொருட்களை திருடியதாக 2 பேர் கைது
கேரளா மாநிலம் கொச்சியில் கட்டப்பட்டு வந்த உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலில் இருந்து முக்கியமான மின்னணு பொருட்களை திருடியதாக 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது.
ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் கட்டுமானப் பணியில் இருந்த கப்பலில் இருந்து, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய மின்னணு பொருட்கள் திருட்டு போனது குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் என்ஐஏ விசாரணை நடத்தி வந்தது.
5 ஆயித்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் ரேகைகளை ஆய்வு செய்ததுடன் தகவல் அளிப்போருக்கு 5 லட்சம் பரிசுத்தொகையும் அறிவித்திருந்த நிலையில், கப்பலில் ஓவிய பணியில் ஈடுபட்டிருந்த பீகாரைச் சேர்ந்த சுமிர்குமார் சிங், ராஜஸ்தானைச் சேர்ந்த தயா ராமை என்ஐஏ கைது செய்தது.
மேலும் அவர்களிடம் இருந்து, மைக்ரோ பிராஷசர்கள், 10 ரேம்கள், கன்சோல்களில் இருந்து எடுக்கப்பட்ட ட்ரைவ்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments