சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இடமாற்ற உதவும் மாருதி சுசூகி இயக்குநர்
சீனாவிலிருந்து வெளியேறும் ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்களை இந்தியாவுக்கு இடமாற்ற உதவுவதாக மாருதி சுசூகி நிறுவன தலைவர் கெனிச்சி ஆயுக்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கத்தால் சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் அவ்வாறு வெளியேறும் ஜப்பான் நிறுவனங்களை இந்தியாவிற்கு ஈர்ப்பதற்காகவும், மேக்-இநிந்தியா திட்டத்தை பலப்படுத்தும் வகையிலும் வணிக ஆய்வுக் கூட்டங்களை நடத்த இருப்பதாக, மாருதி சுசூகி நிறுவன இயக்குநரும், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் தொழில்துறை அமைப்பின் தலைவருமான கெனிச்சி ஆயுக்வா தெரிவித்துள்ளார்.
அதே போல் அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சீனாவிலுள்ள ஆலைகளை இடமாற்றம் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா, வங்கதேசத்தை ஜப்பான் அரசு இணைத்தது குறிப்பிடத்தக்கது.
Comments