அமராவதி அணையில் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பின் உபரி நீர் திறப்பு

0 4670
அமராவதி அணையில் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பின் உபரி நீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டியதால் அதிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அமராவதி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த மாதம் கனமழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 87 அடியை எட்டியது. கடந்த இரு நாட்களாக மீண்டும் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து நாலாயிரத்து ஐந்நூறு கன அடியாக அதிகரித்து நேற்றிரவு முழுக் கொள்ளளவான 90 அடியை எட்டியது.

இதனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அமராவதி அணைக்கு நீர் வரத்து ஆயிரத்து 380 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 88 அடியாகவும் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments