விவசாயிகளுக்கு 20,000 சூரிய மின்னாற்றல் பம்ப்செட்கள் வழங்க அரசு திட்டம்
மின்சார மானியத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக விவசாயிகளிடம் உள்ள இருபதாயிரம் பம்ப் செட்களை சூரிய மின்னாற்றல் பம்ப் செட்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுடுள்ளது.
தமிழகத்தில் 21 லட்சத்து 50 ஆயிரம் விவசாய மின்மோட்டார் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு ஆண்டுக்கு நாலாயிரம் கோடி ரூபாய் மானியமாகச் செலுத்துகிறது.
இந்த செலவைக் குறைக்கும் வகையில் முதற்கட்டமாக இருபதாயிரம் பம்ப்செட்களைச் சூரிய மின்னாற்றலால் இயங்கும் பம்ப்செட்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளது.
இதற்கு ஆகும் செலவை மத்திய அரசு, மாநில அரசு, தமிழ்நாடு மின்னாற்றல் வளர்ச்சி முகமை இணைந்து ஏற்றுக்கொள்கிறது.
பம்ப் செட்டுக்குத் தேவைப்படும் மின்சாரம் போக மீதியை மின்வாரியத்துக்கோ, வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம். சூரிய ஒளி மின்னாற்றல் அமைப்பை ஒருமுறை நிறுவினால் 25 ஆண்டுகள் வரை பயன்தரும் எனக் கூறப்படுகிறது.
Comments