கொரோனா சிகிச்சைக்குப் பின் ஆன்டி பாடிகள் எத்தனை நாளுக்கு உடலில் இருக்கும் ? - புதிய ஆய்வு
கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்கு உடலுக்குள் செலுத்தப்படும் நோய் எதிர்ப்பு ஆன்டி பாடிகள் குறைந்தது 60 நாட்கள் வரை உடலில் தங்கியிருக்கும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவர் நோயின் தன்மைக்கேற்ப ஆன்டி பாடிகள் உடலில் கொரோனோவை எதிர்க்கும் ஆற்றல் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 5 மாதங்களாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 780 பேரின் மாதிரிகளைக் கொண்டு நடைபெற்ற ஆய்வில் 60 முதல் 80 நாட்கள் வரை ஆன்டி பாடிகள் உடலில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Comments