எல்லையில் படையை விலக்க இந்தியா வலியுறுத்தல்

0 1936
எல்லையில் படையை விலக்க இந்தியா வலியுறுத்தல்

இந்திய - சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாஸ்கோவில் சந்தித்துப் பேசிய நிலையில், லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் படைவிலக்கம், முன்பிருந்த நிலையைப் பராமரிப்பது ஆகிய கோரிக்கையை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மே மாதத்தில் கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சீனா படையினரைக் குவித்ததால் நிகழ்ந்த மோதலை தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து சீனப் படைகள் பின்வாங்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தினாலும் சீனா பின்வாங்கவில்லை.

இந்நிலையில் மாஸ்கோவில் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கே ஆகியோர் நேற்று இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேச்சு நடத்தினர்.

பாதுகாப்புத் துறைச் செயலர் அஜய்குமார், ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் வெங்கடேஷ் வர்மா ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சின்போது கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து சீனப் படையினரை விரைவாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், முன்பிருந்த நிலையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாங்கோங் ஏரியின் தென்கரையில் ஊடுருவும் சீனப் படையினரின் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில் எல்லையில் நிலவும் பதற்றத்துக்கு இந்தியாவே முழுப் பொறுப்பு எனச் சீன அமைச்சர் வெய் பெங்கே தெரிவித்ததாகச் சீனாவின் குளோபல் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments