புதுவாழ்வு தரும் சிகிச்சை மையம்
கொரோனாவில் இருந்து மீண்ட வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு, மறுவாழ்வு தரும் புதிய சிகிச்சை மையம் சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டு உள்ளது. இம்மையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து அலசுகிறது, இந்த செய்தித் தொகுப்பு
கொரோனாவில் இருந்து மீண்டு, வீடு திரும்பிய பிறகும், நோயாளிகள் பலர், சுவாச ரீதியான உபாதைகள், நுரையீரல் பிரச்சினை, கடுமையான உடல் சோர்வு, மன அழுத்தம் மற்றும் தசை ரீதியான உடல் வலி என தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு, புதுவாழ்வு வழங்குவதற்காக சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.
நுரையீரலை முழுமையாக விரிவடையச் செய்ய 3 குழாய்களில் நீலம், மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களில் பந்துகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதில் இணைக்கப்பட்டு உள்ள குழாயை ஊதும் போது முதல் பந்தான நீலம் மேலோங்கி வருகிறது.
அதையடுத்து, மஞ்சள், பச்சை ஆகிய பந்துகளும் மேலோங்கி வருவதால் நுரையீரலை விரிவடைய செய்து, சுவாசத்தை அதிகரிக்க செய்கிறது.
நீண்ட கால பாதிப்பு அல்லது தொடர் பாதிப்பு என்ற இரு வகை பாதிப்புகளை, கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் சந்தித்து வருகிறார்கள். இவர்களை முழுமையாக மீட்டெடுப்பதற்காக மறுவாழ்வு மையத்தில், பிசியோ தெரபி நிபுணர்களும், பிரத்யேக மருத்துவர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
Comments