கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில மாதங்களுக்கு தொடர்ந்து அதிகரிக்கும்

0 2422
இந்தியாவில் கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், நோய்த்தொற்று இந்தியா முழுவதும் பரவி சிறிய நகரங்களையும், கிராமப்புறங்களையும் கூட அடைந்துள்ளது என்றார்.

மேலும், கொரோனா பாதிப்பு அடுத்த ஆண்டு வரையில் தொடரும் எனவும், ஒரு சில பகுதிகளில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வீசுவதை காண முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில், நோய்த்தொற்று பாதிப்பு முடிவடையும் என கூற முடியும் என்று குலேரியா நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments