இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனைக்கு சமரசம் செய்ய அமெரிக்கா தயார் - அதிபர் டிரம்ப்

0 1982
இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்சினைக்கு சமரசத் தீர்வு காண அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரமப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் தற்போதைய சூழல் மிகவும் மோசமாக இருப்பதாக விவரித்தார்.

இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்சனைக்கு சமரசத் தீர்வு காண அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் தற்போதைய சூழல் மிகவும் மோசமாக இருப்பதாக விவரித்தார்.

இரண்டு நாடுகளும் மற்றவர்கள் புரிந்துக் கொள்ளுவதை விட கூடுதலான பலத்துடன் ஒன்றை ஒன்றை எதிர்த்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார். தொடர்ந்து சீனாவை கடுமையாக விமர்சித்த டிரம்ப் ரஷ்யாவை விட அதிகமாக பேச வேண்டிய நாடு என்றார்.

188 நாடுகளில் கொரோனா வைரசைப் பரப்பி உலகத்தை துன்பத்தில் ஆழ்த்தியதாகவும் சீனாவை அதிபர் டிரம்ப் சாடினார். பிரதமர் மோடி மகத்தான மனிதர் என்று புகழாரம் சூட்டிய அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள் தமக்கே கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments