கல்லூரி மாணவர்கள் இறுதி பருவத் தேர்வு எழுத புதிய ஏற்பாடு
கல்லூரி மாணவர்களை, அவர்களது சொந்த ஊர்களுக்கு, அருகே உள்ள கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு எழுத வைக்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலால் கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இறுதி பருவத்தேர்வு செப்.15-ம் தேதி முதல் நடத்தப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதையடுத்து அனைத்து பல்கலைக்கழகங்களும் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளன. பருவத்தேர்வுகளுக்கு நேரில் வர முடியாத வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்கள் இணைய வழியில் தேர்வெழுதுவதை அனுமதிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல மாணவர்கள் தேர்வெழுத வசதியாக அவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
Comments