சீன கம்யூனிஸ்ட் கட்சியால் சீனாவில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன- சீன அதிபர்

0 4479
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீனாவில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீனாவில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஆக்கிரமிப்பை சீனா முறியடித்து வெற்றி கொண்டதன் 75ஆம் ஆண்டு நிறைவையொட்டி பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் சி ஜின்பிங் பேசினார்.

அப்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து எந்தவொருவரும், எந்தவொரு சக்தியும் தங்களை அந்நியப்படுத்துவதைச் சீன மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டார். ஜப்பானின் ஆக்கிரமிப்பு முறியடிக்கப்பட்டதில் இருந்தே சீனாவில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதைக் கண்கூடாகக் காணமுடிவதாகக் குறிப்பிட்டார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நாட்டில் வறுமை ஒழிப்பு இலக்கு முழுமையடைந்துள்ளதாகவும், அனைத்து வகையிலும் வளமான சமூகத்தைக் கட்டமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments