'ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது '- ஆய்வுக்குப் பிறகு லான்செட் இதழ் அறிக்கை!

0 4710

உலகில் 210 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பல நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ரஷ்யா கடந்த மாதத்தில் ஸ்புட்னிக் -5 என்ற தடுப்பூசியை உருவாக்கிப் பதிவு செய்தது. ரஷ்யா அவசர கதியில் மருந்தைப் பதிவு செய்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த நிலையில், ரஷ்யா கண்டுபிடித்த மருந்து சிறந்த பாதுகாப்பை அளிப்பதாக லான்செட் மருத்துவ இதழ் அறிவித்துள்ளது.

லான்செட் இதழ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஸ்புட்னிக் மருந்து உடலில் ஆன்டிபாடிகளை அதிகரிப்பதாகவும் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. மொத்தம் 76 பேரில் 21 நாள்களுக்குள் உடலில் ஆன்டிபாடிக்கள் உருவாகியுள்ளன. 28 நாள்களுக்குள் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் டி செல்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. பரிசோதனையில் பங்கேற்றவர்களுக்கு 42 நாள்கள் வரை எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை'' என்று கூறியுள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி மாஸ்கோவின் கேமலாயா நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments