அதிபர் தேர்தலில் 2 முறை வாக்களிக்க முயற்சிக்குமாறு ட்ரம்ப் கூறியதால் சர்ச்சை
அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் இரு முறை வாக்களிக்க முயற்சிக்குமாறு டொனால்டு ட்ரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக வட கரோலினா உள்பட சில மாநிலங்களில் பொதுமக்கள், நவம்பர் 3 ஆம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் அஞ்சல் மூலம் முன்கூட்டியே வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஆதரவாளர்கள் அஞ்சல் மூலமும் வாக்களிக்கட்டும் , தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்றும் வாக்களிக்கட்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து ட்ரம்ப் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்புவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மக்களை 2 முறை வாக்களிக்க டிரம்ப் சொல்லவில்லை என்றும் அவரின் பிரச்சாரக்குழுவும் வெள்ளை மாளிகை மறுத்துள்ளன.
Comments