நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க கோரி 6 மாநில அரசுகள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க கோரி 6 மாநில அரசுகள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 6 ஆம் தேதி வரைஜேஇஇ மெயின் தேர்வையும், செப்டம்பர் 13 ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வையும் நடத்த ஏற்கனவே உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது.
அந்த உத்தரவை எதிர்த்து பாஜக ஆட்சி செய்யாத, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சட்டிஷ்கர் ஆகிய மாநில அரசுகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு முகாந்திரம் இல்லை என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். gfx out
Comments