60 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்
வினாடிக்கு 100 மெகாபைட்ஸ் வேகத்தில் இணைய வசதியை வழங்கக்கூடிய தனது 12வது ஸ்டார்லிங்க் மிஷன் செயற்கைக்கோள்களை ஸ்பேக்எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
தொலைதூரப் பகுதிகளுக்கும் அதிவேக இணையதள வசதியை வழங்கம் பொருட்டு 2024 ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 12 ஆயிரம் சிறிய ரக செயற்கைக்கோள்களை பூமியை சுற்றி நிறுவுவதை நோக்கமாக கொண்டு அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், பால்கான் 9 கேரியர் ராக்கெட் மூலம் தலா 260 கிலோ கிராம் எடைக் கொண்ட 60 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இவற்றையும் சேர்த்து 700க்கும் மேற்பட்ட ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.
Comments