வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி - முதலமைச்சர்

0 2602
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய தொழில்துறை அமைச்சர் மற்றும் ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பட்டாசு ஆலை தொழிலை மீண்டும் தொடங்கிய அன்றே விபத்தில் சிக்கியது வேதனை தருவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட்ட பட்டாசு உற்பத்தியாக இருந்தாலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments