பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு அறிவிப்புக்கு இடைக்கால தடை கோரிய மனு தள்ளுபடி

0 1224
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு அறிவிப்புக்கு இடைக்கால தடை கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு அறிவிப்புக்கு இடைக்கால தடை கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக, JEE, NEET நுழைவு தேர்வுகளுக்கு முன்னதாகவே பொறியியல் கலந்தாய்வு நடைபெறுகிறது என்றும், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு செல்வதால், கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்ட இடங்கள் காலியிடங்களாகும் சூழல் உள்ளது.

ஆகையால், காலியிடங்களை நிரப்புவது குறித்து உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, ஒவ்வொரு ஆண்டும் மாணவர் விரும்பும் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் காலிப்பணியிடங்கள் ஏற்படுவது இயல்பு என்றும், அவற்றை அரசு எவ்வாறு கையாள்கிறது என ஆர்.டி.ஐ. மூலம் மனுதாரர் அறிந்துகொள்ள அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments