"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
லெபனான் வெடிவிபத்து-கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒரு மாதத்துக்கு மேலாக உயிருடன் இருந்த நாய்
லெபனான் வெடிவிபத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி ஒரு மாதத்துக்கு மேலாக நாய் ஒன்று உயிருடன் இருப்பதை மீட்புப் படையினர் கண்டறிந்தனர்.
கடந்த மாதம் 4 ஆம் தேதி நடந்த பயங்கர வெடிவிபத்தில் 190 பேர் உயிரிழந்த நிலையில், ஜெம்மைஸ் என்ற இடத்தில் கட்டிட இடிபாடுகளை மீட்புப் படையினர் அகற்றி கொண்டிருந்த போது, அதில் நாய் ஒன்று அசைவதை கண்டறிந்தனர்.
அதை மீட்கும் பொருட்டு பலமணி நேரமாக இடிபாடுகளை அப்புறப்படுத்திய நிலையில், மேற்கொண்டு செயல்படுவது பாதுகாப்பாற்றது என்பதை உணர்ந்த வீரர்கள் மீட்புப் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். அந்த நாயை உடனடியாக மீட்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments