இஸ்ரேலில் ட்ரோன் மூலம் கஞ்சா போன்ற பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகளை வீசியதாக 2 பேர் கைது
இஸ்ரேலின் டெல் அவிவில் நகரத்தில் ட்ரோன் மூலம் கஞ்சா போன்ற பொருள் அடங்கிய பாக்கெட்டுகளை வீசியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்நாட்டில் மருத்துவ பயன்பாடுக்காக மட்டும் கஞ்சா அனுமதிக்கப்பட உள்ளது. மேலும் மருத்துவ கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கு இஸ்ரேல் கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், ராபின் சதுக்கத்தில் குவாட்காப்டர் என்று அழைக்கப்படும் ட்ரோன் மூலம் கஞ்சா போன்ற பொருள் அடங்கிய பொட்டலங்கள் வீசப்பட்டன.
சிலவற்றை பொதுமக்கள் எடுத்துச் சென்ற நிலையில், 10க்கும் மேற்பட்ட பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments