தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் துணை பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பு என தகவல்
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும்14ந் தேதி தொடங்கும் இந்த கூட்டத்தொடரில் நிதித்துறையை கவனித்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அரசுக்கு ஏற்படும் எதிர்பாரத செலவுகள் மற்றும் அவசர செலவுகளை ஈடுகட்ட துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம்.
அதன்படி கொரோனா பாதிப்பால் அரசுக்கு ஏற்பட்டுள்ள சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட இந்த துணை மதிப்பீடுகள் கைக்கொடுக்கும் என்று நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments