பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை

0 1146
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

பாரமுல்லா மாவட்டம் பட்டான் பகுதியிலுள்ள எடிபோரா எனுமிடத்தில் (Yedipora in Pattan area) பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் சண்டை மூண்டது.

இதைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் அங்கு துப்பாக்கி சண்டை நடைபெறுவதாகவும், பயங்கரவாதிகள் தப்பிவிடாதபடி அப்பகுதியை கூடுதல் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments